மாணவன் சாவு: தனியார் பள்ளியை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்
பொன்னேரி அடுத்த பஞ்செட்டியில் அமைந்துள்ள வேலம்மாள் மெட்ரிகுலேஷன் பள்ளியில் 5ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் ஊத்துக்கோட்டை அருகே அமைந்துள்ள


சரக்கு வாகனம் மோதி பள்ளி வேனில் சென்ற கரடிப்புத்தூர் கிராமத்தை சேர்ந்த மாணவன் திவாகர் திங்கள்கிழமை உயிரிழந்தான். இதையடுத்து மாணவன் படித்த தனியார் பள்ளியை கரடிப்புத்தூர் கிராமத்தை சேர்ந்த மக்கள் இன்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
பொன்னேரி அடுத்த பஞ்செட்டியில் அமைந்துள்ள வேலம்மாள் மெட்ரிகுலேஷன் பள்ளியில் 5ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் ஊத்துக்கோட்டை அருகே அமைந்துள்ள கரடிப்புத்தூர் கிராமத்தில் வசிக்கும் ஈஸ்வரனின் மகன் திவாகர்(9). மேற்கண்ட பள்ளியில் திவாகர் 4-ம் வகுப்பு படித்து வந்தான். கரடிப்புத்தூர் கிராமத்தில் இருந்து 30கிமீ தூரத்தில் இப்பள்ளிக்கு நாள்தோறும் திவாகர் வேன் மூலம் சென்று வந்தான். திங்கள்கிழமை பள்ளி நேரம் முடிந்ததும் மாலை 4மணி அளவில் 20-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களை ஏற்றிக்ககொண்டு பள்ளி வேன் பெரியபாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது ஆரணி அருகே கொள்ளுமேடு பகுதியில் வேன் சென்று கொண்டிருக்கும்போது எதிரே வந்த வாகனம் ஒன்று பள்ளி வேனை உரசியபடி சென்றுள்ளது. அப்போது வேனின் ஜன்னல் இருக்கை ஓரத்தில் அமர்ந்து இருந்த திவாகர் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். இச்சம்பவம் குறித்து ஆரணி போலீஸார் வழக்குப்பதிவு செய்து திவாகர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்ய பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வேனின் ஜன்னல் கண்ணாடிகளை மூடாதது உள்ளிட்ட பல்வேறு அரசு விதிகளை மீறி வேனில் அதிக அளவில் மாணவர்களை ஏற்றி கொண்டு டிரைவர் பொறுப்புடன் வேனை இயக்கி செல்லாததால் மாணவன் உயிரிழந்ததாகவும், மாணவன் சாவுக்கு காரணமான பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கரடிப்புத்தூர் கிராம மக்கள் மற்றும் உயிரிழந்த மாணவனின் உறவினர்கள் திவாகர் சடலத்தை வாங்கமால் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தகவல் அறிந்து வந்த பொன்னேரி கோட்டாட்சியர் பார்த்தீபன், திருவள்ளூர் மாவட்ட காவல்த்துறை கூடுதல் கண்காணிபாளர் செந்தில்குமார், பொன்னேரி டி.எஸ்.பி உஷாராணி, கும்மிடிபூண்டி டி.எஸ்.பி சிவராஜ் ஆகியோர் திவாகரின் உறவினர்கள் மற்றும் பள்ளி நிர்வாகிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது அரசு விதிகளை மீறி செயல்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பொன்னேரி கோட்டாட்சியர் பார்த்திபன் தெரிவித்தார். அதே போன்று மாணவர்கள் ஏற்றி செல்லும் வேனில் அரசு தெரிவித்துள்ள அனைத்து விதிகளையும் கடைபிடித்து வேன்களை இயக்க வேண்டும் என பள்ளி நிர்வாகத்தினரிடம் மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் தெரிவித்தார். பேச்சு வார்த்தையை தொடர்ந்து பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...